Developed by - Tamilosai
கெரவலப்பிட்டிய மின் நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோரால் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
செப்ரெம்பர் 6 ஆம் திகதி கூறப்பட்ட ஒப்பந்தத்தில் அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவை இரத்து செய்து, விண்ணப்பம் மீதான விசாரணை முடியும் வரை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்க கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.