Developed by - Tamilosai
ஹெம்மாதகம பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஹெம்மாதகம, தும்புலுவாவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.