Developed by - Tamilosai
ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் முன்னெடுத்த நாடாளுமன்ற பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்காது குறித்து அந்த கட்சியின் தலைவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது குற்றம் சுமத்தியுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவியை வகிக்கும் ஒருவர் இது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கியமான பதவியை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற அவைக்குள் பாதுகாப்பில்லை எனக் கூறியே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் கூட்டத்தை பகிஷ்கரித்தது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை அமர்வுகளில் கலந்துக்கொண்டனர்.