Developed by - Tamilosai
நுவரெலியாவில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று அதிகரித்து விடும் என்ற அச்சம் நுவரெலியா வாழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.