Developed by - Tamilosai
தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் தந்தையொருவர் தனது மூன்று வயது குழந்தையின் உடலில் வெந்நீரை ஊற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (24) மாலை சிறு குழந்தை இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன், குடிபோதையில் இருந்த தந்தை, குழந்தையை கொடூரமாக தாக்கி, உடலில் வெந்நீரை ஊற்றியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தையின் தந்தை நுவரெலியா பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த குழந்தையின் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட சிகிச்சையின் பின்னர் விசேட வைத்திய நிபுனர் ஒருவரின் கீழ் மேலதிய சிகிச்சைக்காக நுவரேலியா தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படும் எனவும் லிந்துலை பிராந்திய வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி ஏ. ஜெயராஜன் கூறினார்.