Developed by - Tamilosai
மாத்தறையில் விஷத்தால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியில் ஒன்பது மாத வீரதுங்க ஆராச்சிகே பசிது பிரபாத் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக மாலிம்படை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் ஒன்பது மாத மற்றும் மூன்று வயது குழந்தைகள் அழுது கொண்டிருந்த சத்தம் கேட்டு அயல் வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்து, இதனை தொடர்ந்து குறித்த ஒன்பது மாத குழந்தை முச்சக்கரவண்டியில் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் குழந்தைகளுடைய 22 வயதுடைய தாய் இருக்கவில்லை என தெரியவரும் நிலையில், குழந்தைக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தாய் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அந்த பெண் எழுதி வைத்திருந்த கடிதமொன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளதாகவும், கடிதத்தில் தனது மூத்த குழந்தை மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதாகவும், தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கிடையாது எனவும் எழுதி இருந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.