தமிழ் ஓசை
தமிழ் ஓசை

குழந்தைகள் காப்பகத்தில் ஒரே நாளில் 51 பேருக்கு கொரோனா உறுதி

0 85

5 வயதிற்கும் குறைவான குழந்தைகளைப் பராமரிக்கும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 11 குழந்தைகள் உட்பட 51 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடனடி அன்டிஜென் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பண்டாரவெல சுஜாதா செவன குழந்தைகள் காப்பகத்தில் இந்தக் கொவிட் அவதான நிலை ஏற்பட்டுள்ளது.
பண்டாரவெல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் இன்று இந்த உடனடி அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 11 குழந்தைகளுக்கு மேலதிகமாக 6 பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள், உணவகத்தில் பணி புரியும் இருவர் மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் உள்ளிட்ட தரப்பினரே இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.