தமிழ் ஓசை
தமிழ் ஓசை

குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள்

0 101

இன்று (04) தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மூன்று பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு ஒன்று கலைந்து இவர்களை கொட்டியுள்ளது. இதன்போது இரண்டு தொழிலாளர்களும், வீதியில் சென்ற ஒரு இளைஞனும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி ஏ.ஜெயராஜன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.