Developed by - Tamilosai
வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (08) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் மழையுடன் கூடிய காலநிலையானது கடந்த சில நாட்களாக நீடித்து வருகின்றது.
இதன் காரணமாக வவுனியா, தவசிகுளம் பகுதியில் காணப்பட்ட மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிகள் கூட்டில் இருந்து கலைந்து சென்று அப் பகுதியில் நின்றவர்கள் மீது தாக்கியதில் பார்வதி (வயது 66), இரத்தினசிங்கம (வயது 66), மூர்த்தி (வயது 47) ஆகிய மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், வவுனியா, ஈச்சங்குளம் பகுதியிலுள்ள மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக் கூட்டில் இருந்து கலைந்து சென்ற குளவிகள் கொட்டியதில் அப் பகுதியில் நின்ற லயந்தன் (வயது 13) மற்றும் அருண்குமார் (வயது 31) ஆகிய இருவர் பாதிப்படைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இருவேறு இடங்களில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 5 பேரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.