தமிழ் ஓசை
தமிழ் ஓசை

குறைந்த விலையில் பெபில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்
இந்தியாவில் அறிமுகம்

0 50

பெபில் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பெபில் ஃபிராஸ்ட் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் போன்றே காட்சியளிக்கிறது. இதில் மெட்டாலிக் கேசிங், மல்டி-ரோடேடிங் கிரவுன் பட்டன் உள்ளது.

IP67 தரச் சான்று பெற்று இருக்கும் பெபில் ஃபிராஸ்ட் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.87 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர், செடண்டரி ரிமைண்டர், பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், கலோரி டிராக்கர், பயண விவரங்கள் மற்றும் எத்தனை பயனர் தூரம் நடந்தார் என்ற விவரங்களை டிராக் செய்யும்.

பெபில் ஃபிராஸ்ட் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் காலிங் வசதி செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் டயல் பேட் மற்றும் சமீபத்திய அழைப்பு விவரங்களை காண்பிக்கிறது.

இதில் ஏஐ சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, வானிலை விவரங்கள், நோட்டிஃபிகேஷன்கள், மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல், கால்குலேட்டர் என ஏராள அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் பெபில் ஃபிராஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ, கிரே மற்றும் ஆரஞ்சு என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் பெபில் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.