தமிழ் ஓசை
தமிழ் ஓசை

குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு! கொதித்தெழுந்த மக்கள்

0 52

கிளிநொச்சி – கோரக்கன் காட்டுப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் நேற்று (12) வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது கார் ஒன்றில் வந்த குழுவினர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை எனக் கண்டித்து இன்றைய தினம் (13) கோரக்கன்கட்டு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்ட மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதால் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இன்று பகல் வருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இரண்டு சந்தேகநபர்களையும் அவர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கார் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு தாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் நம்பிக்கை தெரிவித்ததை அடுத்து எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.