Developed by - Tamilosai
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் வெளியான விருமன் திரைப்படம் 5 நாட்களில் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதையடுத்து இந்த வெற்றியை விருமன் படக்குழுவினர் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட சூர்யா ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வின் இறுதியில் பேசிய நடிகர் கார்த்தி, விருமன் படம் கிராம புறங்களில்தான் வெற்றியடையும் என்று கூறினார்கள். ஆனால் சென்னையிலும் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்தது, இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுக்கிறது என கூறினார்.
இவரை தொடர்ந்து பேசிய சூர்யா, எங்களை மேலே உயர்த்துவிட எங்களுக்கு பின்னால் ஒரு பெரிய பலம் உள்ளது. அவர்கள்தான் வீட்டில் இருக்கும் பெண்கள். குடும்பத்தில் உள்ள பெண்கள் நமக்காக பல தியாகங்களை செய்கின்றனர். அவர்களை முன்னிறுத்தி நம் வாழ்க்கையை பார்த்தால் அது இன்னும் அழகாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.