Developed by - Tamilosai
யாழ்ப்பாணம் கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு நாளை அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளன.
கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/ 226 கிராமசேவகர் பிரிவில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே அளவீட்டுப் பணிகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் காணி அளவீட்டைத் தடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.