தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டு.மாநகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

0 162

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பிரதி முதல்வர் உட்பட  மாநகர சபை உறுப்பினர்கள் 22 பேர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகர முதர்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் ஒன்று கூடிய மாநகர சபை அமர்வை சில நிமிடங்களில் ஒத்திவைத்த முதல்வர் சபையிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் ரி.எம்.வி.பி ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயேட்சைக்குழு ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் வெளியேறினர்.

 பின்னர் பதாகைகளுடன் ஒன்றுதிரண்ட ஆளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக சபா மண்டபத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் பின்னணியில் இருந்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து மாநகர சபை நிர்வாகத்தில் தலையீடு செய்யும் மாநகர ஆணையாளர், மாநகர சபைச் சட்டத்தை மீறுவதைக் கணடித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். பின்னர் மாநகர சபை முன்றலில் பதாகைகளுடன் மாநகர முதல்வரின் தலைமையில் ஒன்று திரண்ட மாநகர சபை உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.