Developed by - Tamilosai
கிளிநொச்சி பாடசாலை அதிபர் – ஆசிரியர் போராட்டங்களுக்கு பெற்றோர் சமூக அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டங்கள் மாவட்டத்தின் பல பாடசாலைகள் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சி மகா வித்தியாலயம் முன்பாக பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு அதிபர் – ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு அதிபர் – ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.