தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் அச்சுறுத்தல்

0 115

மாவீரர்களை நினைவுகூரும் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று விபரங்களைத் திரட்டி அச்சுறுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஊடகப்பிரிவால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்று திருநகர்ப் பகுதியிலும் அதை அண்டிய பகுதியிலும் இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.