தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கிளிநொச்சியில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம் : ஏ9 வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு!

0 130

கிளிநொச்சி -சேவியர் கடைச் சந்திக்கருகில் இயங்கி வந்த அமுத கடல் கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று (02)காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய தீ விபத்து காரணமாக பல கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகின.

குறித்த தீவிபத்து மின்சார ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

சம்பவ இடத்திற்கு கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர் சென்று தீயினை 11.00மணியளவில் முழுமையாகக் கட்டுப்படுத்தினார்கள்.

கிளிநொச்சியில் உள்ள பாரிய கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் ஒன்றாக இயங்கி வந்த மேற்படி நிறுவனத்தின் ஏற்பட்ட தீயினால் கோடிக்கான பெறுமதியான கட்டடப் பொருட்கள் எரிந்து அழிந்தும், முற்றாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.