தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கிளிநொச்சியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

0 98

கிளிநொச்சியில் கொரோனாத்  தொற்றாளர்களின் எண்ணிக்கை  மீண்டும் அதிகரித்துள்ளதாக  மாவட்ட தொற்று நோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது.

 நேற்றைய தினம் மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் இல்லை என்ற மனநிலையில் பொது மக்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.

பேருந்துகளில் பயணம் செய்வோர், சந்தைகள், பொது இடங்களில் என மக்கள் முகக்கவசம் இல்லாமலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதும் செயற்பட்டு வருகின்றனர். 

இதன் விளைவாகவே குறைந்திருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எனவே பொது மக்கள் பொது இடங்களுக்குப் பயணிக்கும் போது கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.