தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்

0 171

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைக் கூட்டத்தால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து இன்னல்களை எதிர்நோக்குவதாகவும், தாம் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் மத்தியில் அமைந்துள்ள தளவாய்க்காட்டில் பகலில் தங்கி நிற்கும் காட்டு யானைக் கூட்டம் இரவு வேளையானதும்  அப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயன்தரும் வாழை, தென்னை, மா, பலா, கரும்பு, மரவெள்ளி, உள்ளிட்ட பயிரினங்களை அழித்து துவம்சம் செய்து வருவதாக  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சனிக்கிழமை  இரவும் தும்பங்கேணி, களுமுந்தன்வெளி, இளைஞர் விவசாயத்திட்டம், திக்கொடை, பாலையடிவட்டை, நெல்லிக்காடு உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் புகுந்த  காட்டு யானைக்கூட்டம் அங்குள்ள பயிர்களை துவம்சம் செய்தது.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தான் அப்பகுதியைவிட்டு நகர்ந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரவு முழுவதும் கண்விழித்திருந்து தமக்கு யானை வெடிகளும், இல்லாமல் பெரும் அவஸ்த்தைப்படுவதாகவும், அம்மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

தமக்கு யானைப் பாதுகாப்பு வெடிகள் முடிந்ததால் மக்களுக்கு யானைகளை விரட்டும் வெடிகள் வழங்குவதில் தாமதம் இருந்ததாகவும் தற்போதைக்கு யானைகளை விரட்டும் 1000 வெடிகள் வந்துள்ளன.

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அதனை வழங்கவுள்ளதாகவும், இருந்தபோதிலும், இப்பிரதேசத்திலிருந்து முற்றாக காட்டு யானைகளை விரட்டுவதற்கு ஆட்பலம் போதாதுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லாவெளியில் அமைந்துள்ள சுற்றுவட்டக் காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மிக நீண்ட காலமாக எதிர்கொண்டுவரும் இப்பிரச்சினைக்கு அப்பிரதேசத்தில் இரவு பகலாக திரிகின்ற காட்டு யானைகளை முற்றாக அகற்றி தமது வாழ்வாதாரத்திற்கும், நிம்மதியான வாழ்வுக்கும் சம்மந்தப்பட்டவர்கள் வழிசமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.