Developed by - Tamilosai
திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய இருவரும், அதன் உரிமையாளருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிஞ்சாக்கேணியில் நேற்று குறித்த மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அந்த மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை தேடி பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறைறையினர் குறித்த 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இவர்களில் கிண்ணியா காவல்துறையினரால் ஒருவரும், திருகோணமலை காவல்துறையினரால் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளளனர்.