Developed by - Tamilosai
தினசரி மின் தேவை 2,750 மெகாவாட்டிற்கு மேல் இருந்தால் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மின்சாரத் தேவையை கணிக்க முடியாத நிலையில், மின்சார விநியோகத்தை தொடர்வதா அல்லது குறைப்பதா என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்போம் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மின்சார சபைக்கு கிடைக்கும் எரிபொருளின் அளவைப் பொறுத்தே விநியோகத்தை பேணுவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.