தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காவல்துறையினர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

0 59

நாடு முழுவதும் கடத்தல், வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துப்பாக்கிச்சூடு, என மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு பகுதிகளிலும் காவல்துறையினர் ஒலிபெருக்கி ஊடாக பொது மக்களை எச்சரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  • வீடுகளில் இருக்கும் மக்கள் கதவு, ஜன்னல்களை பூட்டி வீட்டிற்குள் அவதானமாக இருக்கவும்.
  • இரவு நேரத்தில் வீடுகளின் பாதுகாப்பினை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
  • வாகனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்கவும்.
  • வெளிநபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம்.
  • உதவி கேட்டு, மின்சார தடை தொடர்பில், அல்லது அதிகாரிகள் என கூறி வீடுகளுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
  • நகைகள் அல்லது பெறுமதியான பொருட்களுடன் வெளியே நடமாடுவதனை தவிர்க்க வேண்டும்.
  • கையடக்க தொலைபேசியின் EMI இலக்கத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் அவதானமாக இருங்கள்.
  • உங்களுக்கு பெறுமதியான பரிசு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறி வரும் நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
  • பேருந்துகளில் புதிய நபர்கள் பழக்கம் ஏற்படுத்த முயற்சித்தால் அதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • பேருந்தில் பைகள் வழங்கினால் பெற்றுக் கொள்வதனை தவிர்த்து அவதானமாக இருங்கள்.

மக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல் துறையினர் வலியுறுத்துகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.