Developed by - Tamilosai
காலி – தலாபிட்டிய பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள தடாகம் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுவனின் சடலம் காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.