Developed by - Tamilosai
புலத்சிங்கள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் தாய் ஒருவர் தனது இரட்டைக் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, ஆசிரியயை ஒருவரினால் செலுத்திச்செல்லப்பட்ட கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காரை ஓட்டிச் சென்ற ஆசிரியை தனக்கு முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது, அங்கு சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளும் தாயும் புலத்சிங்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தாய் உயிரிழந்துள்ளதாகவும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.