Developed by - Tamilosai
அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுபோவில பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி ஒருவர் தனிப்பட்ட பகையால் பிலியந்தலை – மாவிட்ட பகுதியில் நேற்று கொலை செய்யப்பட்டார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கெஸ்பேவ – மாவித்தர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.