Developed by - Tamilosai
வடமராட்சி பகுதியை சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையினால் தவறான முடிவெடுத்த நிலையில் கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காதலி தற்கொலை செய்து கொண்டதை தாங்கமுடியாத இளைஞர் தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.