தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காணாமல் போன 16 வயது பாடசாலை மாணவன்

0 34

கடந்த 7 நாட்களாக கொட்டாவ பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவர் கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் இரண்டு சிறுவர்களுடன் மஹல்வராவ பகுதியிலுள்ள தொலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் பின்னர் மீண்டும் கொட்டாவ நகருக்கு திரும்பி பேருந்தில் மாகும்புர பகுதிக்கு செல்லும் கண்காணிப்பு காணொளி கிடைக்கப்பெற்றுள்ளன.

பின்னர் மீண்டும் கொட்டாவ நகருக்கு திரும்பி பேருந்தில் மாகும்புர பகுதிக்கு செல்லும் கண்காணிப்பு காணொளி கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இந்தநிலையில் குறித்த சிறுவனை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொட்டாவ காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.