தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: உறவினர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

0 242

 காணாமற்போனோர் விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறவினர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில்  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில், உறவினர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திப்புக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலைமையால் குறித்த சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்றைய சந்திப்பில் காணாமல் போனோரின் உறவினர்களின் விவகாரத்தை தீர்த்து வைக்கும் வகையிலான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

உறவுகள் காணாமல் போனதால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றைத் தீர்ப்பதற்கும், தேவையான தீர்வு வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறுதியளித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.