Developed by - Tamilosai
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால், தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வவுனியா- கந்தசாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய குறித்த பேரணி, மணிக்கூட்டுகோபுர சந்தியினை அடைந்து, அங்கிருந்து கண்டி வீதி வழியாக பழையபேருந்து நிலையப்பகுதியை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்”, “நீதி கிடைக்கும் வரை போரோடுவோம்”, “நீதியில்லாத நாட்டில் நீதிமன்றம் எதற்கு” போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்துகொண்டனர்.