Developed by - Tamilosai
அம்பாறை பெரியநீலாவணை மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பெண் நேற்று வியாழக்கிழமை மாலை மருதமுனை வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்துக்குள் உயிரிழந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.