Developed by - Tamilosai
ஆண்டுதோறும் பல்வேறு படிவங்கள் மற்றும் அறிக்கைகளுக்கான காகிதத்திற்காக பெருந்தொகை செலவு ஏற்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அரச நிறுவனங்களில் காகிதங்களுக்காக செலவிடப்படும் பணத்தை சேமிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் வருடாந்த மற்றும் அரையாண்டு அறிக்கைகளை E-book வடிவில் பாராளுமன்றம், கணக்காய்வாளர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் M.M.P.K.மாயாதுன்னே தெரிவித்தார்.
மேலும் பல்வேறு படிவங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒரு படிவம் வழங்கப்பட்டு, சமூக ஊடக வழிமுறைகளை பயன்படுத்தி உரிய தரப்பினருக்கு படிவங்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
புதிய வேலைத்திட்டத்திற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.