Developed by - Tamilosai
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் அஹ்னப் ஜஸீம் நேற்யை தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
“நவரசம்” எனும் கவிதைப் புத்தகத்தில் உள்ள “உருவாக்கு” எனும் கவிதை மூலம் தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கவிஞர் அஹ்னப் ஜஸீம் கடந்த வருடம் மே மாதம் 16 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று புதன்கிழமை (15) புத்தளம் மேல்நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவரை ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு மாதமும் முதலாவது மற்றும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தளம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் பிரிவில் ஒப்பமிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றை மையப்படுத்தி, புத்தளம் மேல்நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட கவிஞர் அஹ்னப் ஜஸீம் மீண்டும் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.