தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கவனயீனத்தால் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட 5 பேர் பலி

0 87

கவனயீனத்தால் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட 5 பேர் பலி
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மஹவ, கெத்தபஹுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் வேனின் சாரதி, வேனின் பின்னால் பயணித்த பிக்கு உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாடசாலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பன்னல பிரதேசத்தில் சுற்றுவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
அதேபோல், ஹபரணை மொரகஸ்வெவ பிரதேசத்தில் 88 வயதான பெண் ஒருவர் பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார்.
மேலும், ஹுங்கம, படஹத பகுதியில் இனந்தெரியாத வாகனம் மோதியதில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.