தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கல்குடாவில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை!

0 86

 கல்குடா பொலிஸ் பிரிவில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை முற்றுகையிட்ட போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்ஹவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் கல்குடா பொலிஸார் இணைந்து நேற்று மாலை ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை முற்றுகையிட்ட போது அங்கிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவிசாவளை மற்றும் பொலநறுவை பகுதியைச் சேர்ந்த 21, 33, 38 வயதுடைய பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி வரை சமூகநோய் தொடர்பான அறிக்கை பெறுவதற்காக தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.