Developed by - Tamilosai
இம்மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் கலால் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 516 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 8ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலால் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 391 பேரும், ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தை மீறியதற்காக 73 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், புகையிலை வரிச் சட்டம் மற்றும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபைச் சட்டத்தை மீறியதற்காக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
05 மில்லியனுக்கும் அதிகமான வழக்கு பொருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலால் உரிம நிபந்தனைகளை மீறிய சம்பவம் தொடர்பில் உரிமம் பெற்ற 87 நிலையங்களுக்கு எதிராக அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.