தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கலப்பு பகுதியில் சடலமொன்று மீட்பு

0 113

ரத்கம, கிரிமெடிய தகன மேடைக்கு பின்னால் உள்ள கலப்பு பகுதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 27 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி மாலை பெணிவத்தை கட்டுதம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பின்னர்  அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது.

அதன்படி நேற்று (18) மாலை அவரது சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.