Developed by - Tamilosai
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்தால் சிறந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிபர் – ஆசிரியர்களிடம் கோருவதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமால் லான்சா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலுள்ள மாணவர்கள் மாத்திரமின்றி முழு உலகிலுமுள்ள மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.
எனினும் இலங்கையிலுள்ள மாணவர்கள் கொரோனாத் தொற்றால் மாத்திரமின்றி ஸ்டாலின் போன்றவர்களாலும் தமது கல்வியை இழந்துள்ளனர்.
நாட்டிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டுமே தவிர, மாணவர்களின் கல்வியை 40 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சிக்கக் கூடாது.
எனவே பாடசாலை மாணவர்கள் குறித்து சிந்திக்குமாறு ஸ்டாலின் போன்றவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். அவர்களது பிள்ளைகளுக்கு இரண்டு ஆண்டுகள் கல்வி இல்லாமலாக்கப்படும் பட்சத்தில் நிலைமை என்னவாகும்?
எனவே மாணவர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.