Developed by - Tamilosai
கரும்பூஞ்சை நோயால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்ததாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த நபர், எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் பின்னரான விளைவுகளால் கரும்பூஞ்சை நோய் உண்டாகுமென்பது குறிப்பிடத்தக்கது.