Developed by - Tamilosai
கம்பஹாவில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கம்பஹா லக்ஷ்மி வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட லக்ஷ்மி வீதி பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கம்பஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.