Developed by - Tamilosai
நடிகர் கமல் ஹாசன் தற்போது இருக்கும் இளம் நடிகர்களும் வியந்து பார்க்கும் அளவுக்கு நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன விக்ரம் படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகள் படைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கமலுக்கு கோவில் கட்டுவதாக கூறி இருக்கின்றனர் கொல்கத்தாவில் இருக்கும் ரசிகர்கள். ஏற்கனவே அங்கு அமிதாப் பச்சனுக்கும் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில் தற்போது கமலுக்கு கோவில் காட்டும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். மேலும் அந்த கோவிலை திறக்க கமல்ஹாசனையே அவர்கள் அழைத்திருக்கிறார்கள் என செய்தி வெளியாகி இருக்கிறது.
கமல் தனது கோவிலை திறக்க கொல்கத்தாவுக்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.