Developed by - Tamilosai
சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்து அதனுடைய தரம் தொடர்பில் பரிசோதனை செய்யும் நடைமுறை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் எரிவாயு மற்றும் கொள்கலன்கள் தொடர்பில் சந்தைப்டுத்தலுக்கு முன்னர் இறுதிகட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்கள் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பல வெடிப்பு சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் அவ் வெடிப்பு சம்பவங்களால் எவ்வித உயிர் பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.