தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கப்பலில் தீ ! பேராயரின் மனு குறித்து நவம்பரில் விசாரணை

0 254

 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 7.77 பில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடக் கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

துறைமுக அதிகாரசபை மற்றும் அதன் தலைவர் உள்ளிட்ட 20 தரப்பினர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாகச் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரையில் உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவில்லையெனக் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.