தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கப்பம் கோருவதற்காக கடத்தப்பட்ட பெண்- மடக்கி பிடித்த பொலிஸார்!

0 60

வவுனியா – பூவரசங்குளம் பகுதியில் வாரிக்குட்டூர் பகுதியில் பெண்ணொருவர் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்டதாக கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கப்பம் கோருவதற்காக பெண்ணொருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கடத்தல்காரர்களால் 05 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளதாகவும், கோரப்பட்ட பணத்தை வழங்குவதற்காக குறித்த பெண்ணின் மகளை அனுப்பி வைக்கும் போர்வையில் பொலிஸார் மிக அவதானமாக செயற்பட்டு கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர்.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 தொடக்கம் 49 வயதுக்குட்பட்டவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண், அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து சந்தேகநபர்களிடமிருந்து 02 இலட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் பலரிடம் அவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.