Developed by - Tamilosai
கனடாவில் கொரோனா தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இத்தகைய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றர்.
இதனால், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் தமது வீட்டில் இருந்து வெளியேறி ரகசிய இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடும் குளிர் நிலவி வரும் சூழலிலும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரகள் ஊடுருவியுள்ளதால், வன்முறைக்கான அபாயமும் அங்கு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.