Developed by - Tamilosai
கனடாவில் காணாமல் போன தமிழர் ஒருவரை அந்நாட்டு காவல்துறை தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிஹரன் விஸ்வலிங்கம் என்ற 55 வயதான தமிழரே கடந்த மே மாதம் 31ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கிப்லிங் சுரங்க நிலையத்தில் ஹரிஹரன் கடைசியாக காணப்பட்ட பின்னர் மாயமானார். அவர் அடிக்கடி TTC வாகனங்களில் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ஹரிஹரன் சாதாரண உடல்வாகுடன் இருப்பார். காணாமல் போனவேளை அவர் எந்த நிறத்தில் மற்றும் எது மாதிரியான உடைகளை அணிந்திருந்தார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.