தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கனடாவில் பணவீக்கம் ?

0 421

கனடாவில் வரலாறு காணாத அளவில் பணவீக்கம் பதிவாகியுள்ளது.

நாட்டில் வருடாந்த பணவீக்க வீதம் ஐந்து வீதமாக உயர்வடைந்துள்ள நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் முதல் தடவையாக இவ்வாறு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 4.8 வீதமாக காணப்பட்டது.

இந்த ஆண்டில் அது 5.2 வீதமாக உயர்வடைந்துள்ளது.

வீடுகள், எரிபொருட்கள் மற்றும் மளிகை பொருட்களது விலைகளின் அதிகரிப்பே இவ்வாறு பணவீக்கம் ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.