Developed by - Tamilosai
நேற்று இரவு கனடாவில் இலங்கைத் தமிழரான காவல்துறை அதிகாரி மோட்டார் சைக்களில் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டாவா காவல்நிலையத்தில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இலங்கையில் பிறந்து ஒட்டாவாவில் வளர்ந்த, 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கனேடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காவல்துறை சேவையில் இணைந்துகொண்டுள்ளார்.
விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்பதை நாங்கள் மிகவும் சோகத்துடன், பகிர்ந்து கொள்கிறோம்” என்று ஒட்டாவா காவல்துறை டுவிட் செய்துள்ளது.
இந்த விபத்து அவர் கடமையில் இல்லாதபோது நிகழ்ந்ததாக ஒட்டாவா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.