தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் ஆரம்பம்

0 174

 அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர் இல்லம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்தார்.

இதற்கான அனுமதியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டத்தின் கீழ் கடந்த 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி, இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 இற்கும் அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.