Developed by - Tamilosai
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கில் வீட்டின் கதவினை உடைத்து 8 பவுண் நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அந்த வீட்டில் இருந்தவர்கள் அயலில் புதிதாக வீடு கட்டி அங்கு குடியேறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது