Developed by - Tamilosai
மன்னார் மாவட்டத்திற்கு இன்று (30) மாலை விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாளர்கள் அமோக வரவேற்பளித்தனர்.
கடந்த 6 மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது ஆதரவாளர்களை மாவட்டம் தோறும் சென்று ரிஷாட் சந்தித்து வருகிறார். அந்த வாகையில் இன்று (30) மாலை மன்னாருக்கு விஜயம் செய்தார்.
மன்னார் தாராபுரம் பகுதியில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை கண்ணீர் மல்க வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து வருகை தந்த பல நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது வயோதிபர்கள், தாய்மார்கள் அவரை வரவேற்று சுகம் விசாரித்ததோடு, அவரின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, தான் சிறையில் இருந்த போது, தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் ரிஷாட் பதியுதீன் நன்றிகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.